Designed by Iniyas LTD
ராசிபலன் (2019-03-19)
மேஷம்:
இன்று எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்பாராத செல்வ சேர்க்கை உண்டாகும்.
ரிஷபம்:
இன்று தொழில் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். வியாபாரத்திற்கு தேவையான பண உதவி கிடைக்கும். போட்டிகள் குறையும்.
மிதுனம்:
இன்று சக ஊழியர்களுடன் இருந்த பிரச்சனைகள் தீரும். நிலுவையில் உள்ள பணிகளை விரைவாக செய்து முடிப்பீர்கள்.
கடகம்:
இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த மெத்தன போக்கு நீங்கி வேகம் பிடிக்கும். குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும்.
சிம்மம்:
இன்று மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். பணவரத்து கூடும். பெண்களுக்கு உங்களது ஆலோசனையை கேட்டு அதன்படி சிலர் நடந்து காரிய வெற்றி அடைவார்கள்.
கன்னி:
இன்று எதிர்ப்புகள் விலகும். காரிய அனுகூலம் உண்டாகும். அனுபவ அறிவைக் கொண்டு காரியங்களை திறம்பட செய்து முடிப்பீர்கள்.
துலாம்:
இன்று துணிச்சலாக சில முக்கய முடிவுகளை எடுப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
விருச்சிகம்:
இன்று உதவி என்று வருபவர்களுக்கு தயங்காமல் உதவிகளை செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் சிறு தடங்கல்கள் சந்திக்க நேரும்.
தனுசு:
இன்று தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். எதிலும் ஒரு முறைக்கு மறுமுறை யோசித்து முடிவெடுப்பது நல்லது. சிலர் புதியவேலைக்கு முயற்சி மேற்கொள்வார்கள்.
மகரம்:
இன்று மனதில் நிம்மதி உண்டாகும் . அதே நேரத்தில் மனதில் வீண்கவலையும் ஏற்படலாம். பிள்ளைகளின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
கும்பம்:
இன்று மனதில் இருந்த கவலை நீங்கி தைரியம் உண்டாகும். எதிலும் லாபத்தை பார்க்க முடியும். எந்த ரூபத்தில் பிரச்சனை வந்தாலும் எப்படிப்பட்ட கஷ்டம் வந்தாலும் அது நீங்கும்.
மீனம்:
இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். அடுத்தவர் திருப்திபடும் வகையில் திறமையாக பேசி சமாளிப்பீர்கள்.