Designed by Iniyas LTD
ராசிபலன்…
மேஷம்
இன்று சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளிடம் இருந்து வந்த மனக்கசப்பு மாறும். குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும். உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும்.
ரிஷபம்
பெற்றோகள் – உறவினர்களின் அரவணைப்பு அதிகமாகும். பயணங்களில் எதிர்பாராத தடங்கல் உண்டாகலாம்.
மிதுனம்
இன்று புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட நினைப்பவர்கள் அதற்கான ஆலோசனைகளில் ஈடுபடுவது நல்லது. கொடுத்த கடனை திருப்பி வாங்க முயல்வீர்கள்.
கடகம்
நண்பர்களிடம் முக்கிய விஷயங்களை ஆலோசனை செய்வதையும், அடுத்தவர் பற்றி பேசுவதையும் தவிர்ப்பது நல்லது.
சிம்மம்
இன்று எதிலும் முன்னேற்றம் காணப்படும். விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர். முக்கிய நபரின் அறிமுகமும், உதவியும் கிடைக்கும்.
கன்னி
பணவரத்தும் அதிகரிக்கும். பழைய கடன்களை திருப்பி செலுத்தக் கூடிய நிலை உருவாகும்.
துலாம்
இன்று வேடிக்கை வினோத நிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் சென்று கலந்து கொள்ள நேரிடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருளை வாங்கி மகிழ்வீர்கள்.
விருச்சிகம்
எதிர்பார்த்த தகவல்கள் தாமதமாக வரும். கூட இருப்பவர்களிடம் எந்த விஷயத்தையும் சொல்லும் போது கவனம் தேவை. பொருளாதாரம் உயரும்.
தனுசு
இன்று பிறருடன் பழகும் போது நிதானம் தேவை. தொழிலில் முன்னேற்றம் காணப்படும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும்.
மகரம்
இன்று எல்லா நலனும் உண்டாகும். எதிர்ப்புகள் நீங்கும். நீங்கள் மற்றவர் மத்தியில் உயர்ந்து நிற்பீர்கள். அனுகூலமான பலன்களை எதிர்பார்க்கலாம்.
கும்பம்
இன்று மனதெம்பு உண்டாகும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் கை கூடும். வாக்கு வன்மையால் காரியம் கைகூடும்.
மீனம்
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும்.