Designed by Iniyas LTD
ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய கோரி நெல்லையில் போராட்டம்
தமிழக சிறையில் இருக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரி நெல்லையில் இனப் படுகொலைக்கு எதிரான தமிழர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, கடந்த 25 ஆண்டுகளாக சிறைகளில் வாடும் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். அரசியல் சாசனம், 161 பிரிவின் படி 7 பேரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி நெல்லை ரயில் நிலையம் முன்பாக இனப் படுகொலைக்கு எதிரான தமிழர் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 50 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.