Designed by Iniyas LTD
லிபியாவில் படகு ஒன்று மூழ்கியுள்ளது
லிபிய கரையோரமாக குடியேற்றக்காரர்களை ஏற்றி வந்த படகு ஒன்று மூழ்கியதை அடுத்து, அதிலிருந்த நூற்றுக்கணக்கானோர் கடலில் மூழ்கியிருக்கலாம் என்று அஞ்சப்படும் இடத்தில் மீட்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
700 குடியேற்றக்காரர்கள் வரை பயணித்த அந்த படகில் இருந்து இதுவரை 28 பேர் மாத்திரமே மீட்கப்பட்டுள்ளனர்.
ஆபத்தான அந்த படகில் இருந்து இன்னுமொரு சரக்கு கப்பலுக்கு ஏறுவதற்காக, அனைவரும் முண்டியடித்துக்கொண்டு படகின் ஒரு புறத்துக்கு நகர்ந்ததால் இந்த விபத்து நடந்ததாக செய்திகள் கூறுகின்றன.
மீட்பு நடவடிக்கைகளில் 20 கப்பல்களும், 3 ஹெலிக்கொப்டர்களும் ஈடுபட்டுள்ளன. இப்படியாக கடந்த மாதங்களில் தொடரும் சம்பவங்களில் பலர் பலியாகியுள்ளனர்.
வடக்கு லிபியாவில் சில நாட்களுக்கு முன்னதாக, இதேபோல இன்னுமொரு படகு மூழ்கியதில் 400 பேர் பலியானதாக அஞ்சப்படுகின்றது.