தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வடக்கில் உள்ள விகாரைகளை பாதுகாக்க கோரி உச்சமன்றில் மனு

வடமாகாணத்திலுள்ள  புத்த விகாரைகளை பாதுகாக்க அரசாங்கத்துக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  வழக்கறிஞர் தர்ஷன வேரதுவகே  என்பவரால்  தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான அமைச்சர் சாகல ரத்னாயக்க உள்ளிட்ட சில அதிகாரிகள் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.iranaimadu_vikaarai

 வடபகுதியில் பௌத்தர்களின் உரிமைகள் அழிக்கப்பட்டு வருவதாகவும், புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டு வருவதாகவும் வழக்கறிஞர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் மற்றும் மாகாண சபைகள் புத்த மதத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இலங்கை அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், வடமாகான முதலமைச்சர் விக்னேஸ்வரன் வட பகுதியில் அமைந்துள்ள பௌத்த உரிமைகளை சிதைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாகவும், இதன் மூலம் அரசியல் சாசனத்தை காப்பதாக வழங்கியுள்ள சத்தியப்பிரமாணத்தை முதலமைச்சர் மீறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 எனவே, வடமாகான முதலமைச்சர் அரசியல் சாசனத்தை மீறியுள்ளதாக தீர்ப்பு வழங்கும்படியும், அதே போன்று அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுத்துள்ள வடமாகாணத்தில் அமைந்துள்ள புத்த விகாரைகளுக்கு பாதுகாப்பு பெற்றுக்கொடுக்கும் படி மத்திய அரசாங்கத்திற்கு உத்தரவொன்றை பிறப்பிக்குமாறும் கோரியுள்ளார்.

Comments
Loading...