Designed by Iniyas LTD
வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் மகஜர் ஒன்று யுனிசெப் இடம் கையளிப்பு…
சர்வதேச மனித உரிமைகள் நாளான இன்று வடக்கில் உள்ள ஜந்து மாவட்டத்தினை சேர்ந்த வலிந்து காhணாமல் ஆக்கப்பட்டவர்கள் முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள்.
இதன்போது காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஜக்கியநாடுகள் சபையின் அலுவலகத்திடம் மகஜர் ஒன்றும் அனுப்பியுள்ளார்கள்.
குறித்த மகஜரை முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்வர்களின் சங்க தலைவி ம.ஈஸ்வரி , வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி கலாராஞ்சினி அவர்களிடம் கையளித்திருந்தனர்.
அவர்களின் மகஜரை கிளிநொச்சியில் உள்ள யுனிசெப் அலுவலகத்தில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி கலாரஞ்சனி அவர்கள் கையளித்துள்ளார்.
இதேவேளை இது தொடர்பில் கருத்து தெரிவித்த கலாரஞ்சனி இங்குள்ள அரசாங்கத்திடம் எத்தனையோ தடவை சந்தித்து எமது பிரச்சணைகளை கூறியுள்ளோம் இதுவரைக்கும் எதுவித தீர்வும் தரவில்லை என்றும் ,
இனிமேல் சர்வதேசந்தான் எமக்கான தீர்வு தரவேண்டும் என கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

