Designed by Iniyas LTD
வடமராட்சி கிழக்கில் கடலில் மிதந்து வந்த இனந்தெரியா பொருள்
வடமராட்சி கிழக்கு உடுத்துறைப் பகுதியில் இனந்தெரியாத பொருள் ஒன்று இன்று காலை கரையொதுங்கியுள்ளது. கடலில் மிதந்து வந்த மேற்படி பொருளை மீனவர்கள் இரண்டு படகுகள் மூலம் கரைக்கு இழுத்து வந்ததாக மீனவர் சங்கத்தினர் கூறினர். இது தொடர்பில் பளைப் பொலிஸ் நிலையத்துக்குட்பட்ட மருதங்கேணி உபபொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அங்கு வந்த பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டனர்.
சர்வதேச கடல் எல்லையை அடையாளப்படுத்தும் மிதவையாக இது இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான விசாரணைகளை பொலிஸாரும் இராணுவத்தினரும் மேற்கொண்டு வருகின்றனர்.
