தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வந்துவிட்டது எலக்ரிக் ரூத்பிரஸ்

அமெரிக்க நிறுவனமான Onvi பல் துலக்குவதற்காக electric toothbrush ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுவாக அனைவரும் காலை எழுந்தவுடன் பிரஸில் பேஸ்டை வைத்து வாயின் வலது, இடது பக்கம் தேய்த்து விட்டு பல் துலக்கும் கடமையை முடித்து விடுவோம்.too tooth

ஆனால் பற்கள் எந்த நிலையில் சுத்தம் ஆகியுள்ளது என்பதை கவனிக்க மாட்டோம். இந்த நிலையை சரிசெய்ய ஒரு electric toothbrush அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பேஸ்டை வைத்து பற்களில் வைத்தால் போதும் அது தனது வேலையை செய்ய ஆரம்பித்து விடும். இதில் சிறப்பம்சம் என்னவென்றால் உங்கள் பற்கள் எந்த அளவு சுத்தம் செய்யப்பட்டுள்ளது என்பதை இதில் பொருத்தப்பட்டுள்ள கமெரா மூலம் உங்கள் ஸ்மார்ட் மொபையில் பார்த்துக் கொள்ளலாம்.

இதன் மூலம் எடுக்கப்படும் புகைப்படங்களை உங்கள் பல் மருத்துவரிடம் காட்டி சிகிச்சையும் எடுத்துக் கொள்ளலாம். இது தவிர, ஒரு கண்ணாடி, பிராபி கப், ரப்பர் முனை மற்றும் ரப்பர் அளவு கோல் கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் விற்பனைக்கு வரும் இந்த சாதனம் 399 டொலருக்கு விற்கப்படவுள்ளது.

Comments
Loading...