தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வரும் ஐபிஎல்லில் சங்ககாரா விளையாடுவாரா?- எதிர்பார்க்கும் ரசிகர்கள்

இந்தியாவில் ஆரம்பமாகவுள்ள 8வது ஐபிஎல் தொடரில் இலங்கை அணியின் நட்சத்திர வீரர் சங்கக்காரா விளையாட வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.Sangakkara

பல்வேறு வீரர்களை பல கோடிக்கு ஏலம் எடுத்த அணிகளும் முன்னணி வீரர்களான சங்கக்காரா, ஜெயவர்த்தனேவை வாங்கவில்லை. இது ரசிகர்களுக்கு வியப்பினையும் ஏமாற்றத்தனையுமே ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் முடிந்த உலகக்கிண்ணத் தொடரில் சங்கக்காரா தொடர்ச்சியாக 4 சதங்களை அடித்து சாதனை படைத்தார். மேலும் ஓட்டங்கள் குவிப்பிலும் அசத்தினார்.

இக்கட்டான நிலையில் அணியை காப்பாற்றும் திறமை வாய்ந்த வீரராக சங்கக்காரா இருப்பதால், தொடரின் நடுவில் இவர் தெரிவு செய்யப்படலாம் என இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் மாத்திரமல்ல சர்வதேச ரீதியில் அனைத்து ரசிகர்களும் எதிர்பார்க்கின்றனர்.

மேலும், ஐபிஎல் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், அதில் சங்கக்காரா மற்றும் ஜெயவர்த்தனே விளையாடுவார்களா என்ற ஏக்கம் ரசிகர்களை வெகுவாக பாதித்துள்ளது.

எவ்வாறாயினும் சங்கக்காராவின் உலகக்கிண்ண சாதனைகள் ஐபிஎல் உரிமையாளர்களை நிச்சயம் கவர்ந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

 

Comments
Loading...