தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வவுனியாவில் தனியார் கல்வி நிலையத்திற்கு சென்ற மாணவன் மாயம்

வவுனியாவில் தனியார் கல்வி நிலையத்திற்கு சென்ற மாணவன் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.

குறித்த மாணவன் கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

வவுனியா வெளிக்குளம் பகுதியில் வசிக்கும் சிவசீலன் தாரூபன் என்ற மாணவனே இவ்வாறு காணமல் போயுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வைரவபுளியங்குளத்தில் உள்ள தனியார் கல்வி நிலையத்திற்கு செல்வதாக கூறி விட்டு சென்ற மாணவன்  நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை எனவும் கூறப்படுகின்றது ,

மாணவனை  பல இடங்களில் தேடிய பெற்றோர். எந்தவித தகவலும் இல்லாத நிலையில் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த மாணவன்  வர்தக பிரிவில் கல்வி கற்று வருவதுடன் இந்த வருடம் நடைபெறவுள்ள க.பொ.த. உயர்தர பரீட்சையில் தோற்ற இருந்துள்ளார்.,

வீட்டில் இருந்து செல்லும் போது மாணவன்  சாம்பல் நிற ரீசேட் மற்றும் நீல நிற ஜீன்ஸ் மற்றும் செருப்பு அணிந்திருந்ததுடன், கறுப்பு நிற லேடிஸ் சைக்கிளில் சென்றதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Comments
Loading...