தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வவுனியாவில் விக்ஷமிகள் செயல் – ஆறுமுகநாவலரின் சிலை உடைப்பு..

வவுனியா பூந்தோட்டம், பெரியார்குளம் ஆறுமுகநாவலர் வீதியில் உள்ள ஆறுமுகநாவலரின் திருவுருவ சிலையை விசமிகள் சிலர் உடைத்து சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த  சம்பவம் நேற்று மாலை   இடம்பெற்றுள்ளதாக  அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

அதோடு குறித்த  பகுதியில் தினமும் இரவு வேளைகளில் இளைஞர்கள் மது அருந்துவதாகவும் அவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்,

குறித்த இளைஞர்களிற்கு இடையில்  இடம்பெற்ற தகாராறு காரணமாக சிலையை உடைத்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும்  அவர்கள்  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...