தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

விசேட திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட அரைக்கும் ஆலையை பார்வையிட்டார் டெனிஸ்வரன்

வட மாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் தனது வரவு செலவு திட்ட நிதியில் இருந்து கிராம மட்ட சங்கங்களை வாழ்வாதாரத்தில் உயர்த்தும் விசேட திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட அரைக்கும் ஆலையை பார்வையிட்டுள்ளார்.ara

மேற்படி, மன்னார் மாவட்டம், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட பாலியாறு மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு கடந்த 2014ம் ஆண்டு 2 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் வழங்கப்பட்ட அரைக்கும் ஆலையையே வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் நேற்று திங்கட்கிழமை மாலை நேரில் சென்று பார்வையிட்டார்.

திடீர் விஜயத்தை மேற்கொண்டு ஆலையினை பார்வையிட்டதோடு, அதற்கு பொறுப்பான மாதர் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினருடனும் கலந்துரையாடினார்.- இதன்போது குறித்த திட்டத்தினூடாக தாம் நாளாந்தம் குறைந்தது 300 ரூபாய் தொடக்கம் 600 வரையில் வருமானம் பெறுவதாகவும், தம்முடைய புதிய நிர்வாகம் சிறப்பான முறையில் இயங்குவதாகவும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Comments
Loading...