தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

விஜயகாந்த் – பிரேமலதா வழக்கு விசாரணைக்க இடைக்கால தடை

தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் மீதான 14 அவதூறு வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் மீது தமிழக முதல்வர், அமைச்சர்கள் சார்பில் 14 கிரிமினல் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன.vijayakanth - piremalatha

இந்த அவதூறு வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்று விஜயகாந்த், பிரேமலதா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருவரும் நிவாரணம் பெற்று கொள்ளுமாறு உத்தரவிட்டது. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் விஜயகாந்த், பிரேமலதா ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். அதில், தங்களின் மீது தொடரப்பட்டுள்ள 14 அவதூறு வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்பிலும் நடைபெற்ற விவாதங்களை நீதிபதி கேட்டறிந்தார். பின்னர் அவர் பிறப்பித்த உத்தரவில், “தமிழகம் முழுவதும் விஜயகாந்த், பிரேமலதா ஆகியோருக்கு எதிராக தமிழக முதல்வர், அமைச்சர்கள் சார்பில் தொடரப்பட்ட 14 அவதூறு வழக்குகளின் விசாரணைக்கும் இடைக்கால தடை விதிப்பதாகவும், இந்த வழக்குகளில் நேரில் ஆஜராகவும் அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...