Designed by Iniyas LTD
விஜய்யுடன் சேர்ந்தா? ஐயோ நான் மாட்டேன்! பிரபல நடிகை
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் தளபதி 62 படத்தில் விஜய்யுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க முன்னணி நடிகை ஒருவர் மறுப்பு தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பரபரப்பாக பேசப்பட்டவர் ஓவியா. இதையடுத்து பட வாய்ப்புகளும், விளம்பர வாய்ப்புகளும் அவரை தேடி வந்தன.
அவற்றில் நடிக்க அதிக சம்பளம் கேட்டதாக கூறப்பட்டது. என்றாலும் பின்னர் எந்த படத்திலும் அவர் நடிக்கவில்லை. தற்போது ராகவா லாரன்சுடன் ‘காஞ்சனா-3’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவரது 62-வது படம் விரைவில் தொடங்க இருக்கிறது. இதில் விஜய் ஜோடியாக ரகுல்பிரீத்தி சிங் நடிக்கிறார். இந்த படத்தில் ஓவியாவை ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கும்படி அணுகினார்கள். இது தொடர்பாக பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது.
ஆனால், இந்த படத்தில் நாயகி வேடம் தனக்கு இல்லை என்று தெரிந்ததால், ஓவியா நடிக்க மறுத்துவிட்டார் என்று கூறப்படுகிறது. விஜய் – முருகதாஸ் இணையும் 3-வது படமான இதை பிரமாண்டமாக தயாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
விஜய் படத்தில் நடிக்கும் நல்ல வாய்ப்பு வந்தும் அதை ஓவியா ஏற்க மறுத்தது குறித்து கோடம்பாக்கம் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த வேடத்தில் ‘பிக்பாஸ்’ ஜுலி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.