Designed by Iniyas LTD
விடுதலைப் புலிகளுக்கு அஞ்சிய இந்திய இராணுவம்!
இந்திய அமைதி காக்கும் படைக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையில் சிறப்பான ஒரு உறவு காணப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனை இந்திய அமைதி காக்கும் படையுடன் இலங்கைக்கு வருகைத்தந்த இந்திய முன்னாள் இராணுவ ஜெனரல் ஷெனோன் சிங் தெரிவித்துள்ளார். பிபிசி செய்தி சேவையுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்திய அமைதி காக்கும் படையிடம் காணப்பட்ட ஆயுதங்களை விடவும் விடுதலை புலிகளிடம் சிறந்த ஆயுதங்கள் காணப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எங்கள் பல்வேறு அலுவலகங்கள் மூலம் விடுதலை புலி உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்கினோம். அவர்கள் எங்கள் பாதுகாப்பு முகாமிற்குள் வந்தார்கள். அங்கு அவர்கள் அதன் அமைப்பு தொடர்பில் விழிப்புணர்வு பெற்றார்கள். அவர்கள் மிகவும் சிறப்பான நிலையில் இருந்தார்கள். உண்மையாக கூறினால் அவர்கள் வரும் போது நாங்கள் எங்கள் ஆயுதங்களை மறைத்தோம் என ஜெனரல் ஷெனோன் சிங் மேலும் தெரிவித்துள்ளார்