தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

விடுதலைப்புலிகளின் வெடிமருந்துகளை தேடி ….

 

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட இரணைப்பாலை பகுதியில் விடுதலைப்புலிகளால் வெடிமருந்துகள் புதைத்துவைத்துள்ளதாக நம்பப்டும் இடம் ஒன்றில் நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாக தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியில் அமைந்துள்ள சென்அன்ரனிஸ் விளையாட்டு மைதானத்தில் ஒருபகுதியில் விடுதலைப்புலிகளின்  வெடிமருந்துகள் புதைத்துவைத்துள்ளதாக இரகசிய பொலீஸாருக்கு கிடைக்கப்பெற்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தகவலையடுத்து முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமையநேற்றையதினம்  11.30மணியளவில் தோண்டு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்கள் சுமார் .

ஒன்றரை மணிநேரம் தோண்டப்பட்டபோது எதுவித பொருட்களும் கிடைக்காத நிலையில் பகல் 1.00 மணியளவில் தோண்டும் நடவடிக்கையினை நிறுத்தியுள்ள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...