Designed by Iniyas LTD
விடுதைப் புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் விடுதைப் புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி, பளைக்கு அண்மித்த அரசர்கேணி பிரதேசத்தில் இந்த நிலக்கீழ் பதுங்கு குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பதுங்கு குழி 35 அல்லது 45 அடி
குறித்த காணியின் உரிமையாளர் காணியை சுத்தம் செய்யும் போது சீமேந்தால் கட்டப்பட்ட சுவர் தென்பட்டதையடுத்து இராணுவ முகாமிற்கு தகவல் வழங்கியுள்ளார்.
சம்பவ இடத்துக்கு சென்ற இராணுவத்தினர் குறித்த காணியில் இருப்பது விடுதைப் புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழி என்பதை உறுதி செய்துள்ளனர்.
குறித்த பதுங்கு குழியானது சுமார் 35 அல்லது 45 அடி நிலமட்டத்தில் இருந்து கீழ் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
