Designed by Iniyas LTD
வித்தியா கொலை வழக்கு மேல்நீதிமன்றுக்கு மாற்றம்!
புங்குடுதீவு பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்தியாவின் வழக்கு விசாரணைகள் மேல்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்படவுள்ளது.
குறித்த வழக்கு இந்த மாத இறுதிப் பகுதியில் மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஊர்காவல்துறை நீதிமன்ற நீதிவான் வை.எம் எம்.றியால் நேற்று தெரிவித்துள்ளார்.
குறித்த மாணவி பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பில் கைது செய்யப்பட்ட 12 சந்தேகநபர்களுக்கும் எதிரான வழக்கு விசாரணைகள் ஊர்காவல் துறை நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில்நேற்று இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போதே நீதிவான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அத்துடன், புங்குடுதீவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வித்தியாவின் கொலை வழக்கு சந்தேக நபர்களை மேலும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஓராண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் வித்தியா கொலை வழக்கு சம்மந்தமான விசாரணை இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் றியால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இவ்விசாரணையின் போது மேலும் 14 நாட்கள் சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிவான் றியால் உத்தரவிட்டார்.