தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

விமல் வீரவன்ச மருத்துவமனையில் அனுமதி!

vimal_weeravansa_01வெலிக்கடைச் சிறைச்சாலையில், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அவரது உடல்நிலை, மோசமடைந்ததைத் தொடர்ந்தே, இன்றுக் காலை அவர், வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் என்று, தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்தது.   தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள விமல் எம்.பி, பிணைக் கோரிக்கைகளை முன்வைத்த போதிலும், அவை நிராகரிக்கப்பட்ட நிலையில், கடந்த புதன்கிழமை முதல், மகசின் சிறைச்சாலையில், உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வந்தார்.

  அரச பொறியியல் கூட்டுத்தபனத்துக்குச் சொந்தமான 40 அரச வாகனங்களை, தவறான முறையில் பயன்படுத்து, அரசுக்கு 90 மில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில், ஜனவரி 10ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட விமல் எம்.பி, அதன் பின்னர், தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...