தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

விமான சாகச பயிற்சியின் போது இரண்டு ஜெட் விமானங்கள் விபத்து

நெதர்லாந்தில் விமான சாகச பயிற்சியின் போது இரண்டு ஜெட் விமானங்கள் ஒன்றை ஒன்று உரசியதில் விபத்துக்குள்ளாகியுள்ளது. சுவிஸ் விமானப்படை அணியினர் சாகச நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, இதனை முன்னிட்டு நெதர்லாந்தில் உள்ள Leeuwarden நகரில் ஜெட் விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தன.kjh

அப்போது, Friesland என்ற கிராமத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்த போது, Tiger F-5E plans என்ற இரண்டு விமானங்கள் ஒன்றை ஒன்று உரசியது. இதில் ஒரு விமானம் கட்டுப்பாட்டை இழந்ததில், தட்டுத்தடுமாறி பெரிய குளத்தில் விழுந்தது. விமானி புற்களின் மீது விழுந்து தப்பித்துள்ளார், இருப்பினும் அவருக்கு ஏற்பட்ட காயத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், மற்றொரு விமானம் பத்திரமாக தரையிறங்கியுள்ளது.

தற்போது இந்த விபத்தால் நடக்கவிருந்த விமான சாகச நிகழ்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, கடந்த 52 வருடங்களில் தற்போது தான் முதல் முறையாக பயிற்சியின் போது விபத்து நிகழ்ந்துள்ளது என சுவிஸ் பாதுகாப்பு அமைச்சம் தெரிவித்துள்ளது.

Comments
Loading...