தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

விமானிகளாகும் அரேபிய பெண்கள் ….

சவூதி அரேபியா,  நாட்டின் தலைநகர் ரியாத்தைச் சேர்ந்த ஃப்ளைநஸ் என்ற ஏர்லைன் நிறுவனமானது முதன்முறையாக விமான சேவையாளர்கள் பணிக்கு பெண்களை நியமனம் செய்யவுள்ளது.

இதற்காக குறித்த நிறுவனம்  அண்மையில் விளம்பர அறிவிப்பை வெளியிட்டது.

இந்தப் பணிக்காக சுமார் ஆயிரம் பெண்கள் விண்ணப்பித்துள்ளதாக கூறப்பட்டுகின்றது.

இதன் மூலம் முதன்முறையாக  விமான போக்குவரத்துத்துறையில் சவூதி பெண்கள் கால்பதிக்க உள்ளனர்.

இதேவேளை குறித்த நிறுவனத்தின்  செயல்  பிற நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் முயற்சியாக பலராலும் பாராட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...