தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஷங்காய் விமான நிலையத்தில் குண்டு வெடிப்பு

சீனாவின் தொழில்நகரமான ஷங்காயில் உள்ள விமான நிலையத்தில் இன்று குண்டு வெடித்த சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்தனர்.  shankai

சீனாவின் ஷங்காய் நகரில் உள்ள புடோங் விமான நிலையத்தில் உள்ள டிக்கெட் கவுண்ட்டர் அருகே (உள்ளூர் நேரப்படி) இன்று பிற்பகல் சுமார் 2 மணியளவில் திடீரென்று குண்டு வெடித்தது.   அதிக வீரியமில்லாத இந்த குண்டு வெடிப்பில் சிக்கி காயமடைந்த மூன்று பேர் அருகாமையில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என உள்ளூர் ஊடகங்கள் படங்களுடன் செய்தி வெளியிட்டு வருகின்றன.

Comments
Loading...