தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அடையாறு கரையோரத்தில் வசித்தவர்களுக்கு துரைப்பாக்கத்தில் குடியிருப்புகள் ஒதுக்கீடு

chennai-adayar-sசென்னையின் அடையாறு, கூவம் உள்ளிட்ட ஆற்றங்கரையோரம் வசித்தவர்களுக்கு, முதற்கட்டமாக துரைப்பாக்கம், பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் ஒதுக்கப்படுள்ளன. அங்குள்ள வசதிகள் மற்றும் குறைகள் குறித்துப் பார்க்கலாம்.

 சென்னையின் அடையாறு, கூவம் மற்றும் சாலையோரங்களில் வசித்தவர்களுக்கு, துரைப்பாக்கம் கண்ணகி நகரில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டு அங்கு அவர்கள் வசித்து வருகிறார்கள். இந்நிலையில், அங்கு ஏற்படுத்தப்பட்ட விரிவாக்க திட்டத்தின் கீழ் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் காலியாக இருக்கின்றன. தற்போது வெள்ளத்தால் குடிசைகளை இழந்தவர்களுக்கு அங்கு குடியிருப்புகள் ஒதுக்கப்பட இருக்கின்றன.

 குடியிருப்புகளை பயனாளிகளுக்கு கொடுப்பதற்கான பணிகளில் அரசு அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனால் ஏற்கனவே அங்கு வசிக்கும் ஆயிரக்கணக்கணோருக்கு தனியாக மருத்துமனைகள் ஏதும் இல்லை என்கின்றனர், அங்கு வசிக்கும் குடியிருப்பு வாசிகள். இங்குள்ளவர்கள் பெரும்பாலானோர் கல்வியறிவு இல்லாததால், அவர்களுக்கு ஏற்ற வேலைவாய்ப்புள் இல்லை என்றும் அவர்கள் கவலையுடன் கூறுகின்றனர்.

 இது குறித்த அரசு அதிகாரிகளிடம் கேட்ட போது அண்மையில் பெய்த கனமழைக்கு கூட இங்கு தண்ணீர் தேங்கவில்லை என்றும் அந்த அளவிற்கு வடிகால் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், தடையற்ற மின்சாரம், மற்றும் குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாவும், பயனாளிகள், எந்தவித தயக்கமும் இன்றி இங்கு குடியேறலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

 ஏழை மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நீர் நிலைகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

Comments
Loading...