தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அணுமின் உற்பத்தி திட்டங்களில் இந்தியா- ரஷ்யா ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த முடிவு

modi-puthinஅணு மின்சார உற்பத்தி விவகாரத்தில் இந்தியா ரஷ்யா இடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ரஷ்யாவின் யூஎப்ஏ நகரில் அந்நாட்டு அதிபர் புதினைச் சந்தித்து, பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பாகவும் இவ்விரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

விண்வெளி தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாகவும், இது சுமார் 90 நிமிடங்களுக்கு நீடித்ததாகவும் ஜெய்சங்கர் கூறியுள்ளார். ரஷ்யாவில் யோகா தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டதற்கும் நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.

Comments
Loading...