Designed by Iniyas LTD
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றுக்கு முன்னேறினார் செரீனா வில்லியம்ஸ்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனா வில்லியம்ஸ் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
நியூயார்க்கில் இன்று காலை நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில், ரஷ்யாவின் டியாட்சென்கோ, முதல் நிலை வீராங்கனையான செரீனாவுடன் பலப்பரீட்சை நடத்தினார்.
தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய செரீனா வில்லியம்ஸ், முதல் செட்டை 6-0 என கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் செரீனா 2-0 என முன்னிலை பெற்றிருந்தபோது, காயம் காரணமாக டியாட்சென்கோ விலகினார். இதையடுத்து செரீனா வில்லியம்ஸ் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.