தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இரண்டாவது சுற்றுக்கு சானியா – ஹிங்கிஸ் இணை முன்னேற்றம்

saniaஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் சானியா மிர்சா – மார்டினா ஹிங்கிஸ் இணை இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

 மகளிர் இரட்டையர் பிரிவில் நடந்த முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் இணை, கொலம்பியாவின் மரினா மரினோ, பிரேசிலின் டெலினா பெரிரா இணையை எதிர்த்து விளையாடியது.

 இந்தப் போட்டியில் 6-2, 6-3 என்ற நேர் செட்களில் சானியா இணை வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது. மேலும் ஆஸ்திரேலிய ஓபன் முதல் சுற்றில் பெற்ற வெற்றியின் மூலம், சானியா மிர்சா – மார்டினா ஹிங்கிஸ் இணை தொடர்ச்சியாக 31 போட்டிகளில் வெற்றியைப் பதிவு செய்து வரலாறு படைத்துள்ளது.

Comments
Loading...