Designed by Iniyas LTD
ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய நான் தயாராக உள்ளேன் – ஷீலா தீட்சித்
ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய நான் தயாராக உள்ளேன் என்று கூறிய கேரள ஆளுநர் ஷீலா தீட்சித் அதே சமயத்தில் பதவி விலகும்படி மத்திய அரசிடம் இருந்து அதிகாரபூர்வமாக எந்த தகவலும் வரவில்லை. என்று கூறியுள்ளார்.
மேலும் எந்தவிதமான நெருக்கடிக்கும் நான் அடிப்பணிய மாட்டேன். என்றும் தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடியை ஷீலா தீட்சித் சந்தித்து பேசியதையடுத்து ஆளுநர் பதவியை ஷீலா தீட்சித் ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியுடன் நேற்று திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் சாமி தரிசனம் செய்த பின் நிருபர்களிடம் பேசிய அவர் எந்தவிதமான நெருக்கடிக்கும் நான் அடிப்பணிய மாட்டேன். என கூறியுள்ளார்.