Designed by Iniyas LTD
இந்தியாவுக்கான வெற்றி வாய்ப்பு கைநழுவிப் போனது
பிரிஸ்பேனில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கான வெற்றி வாய்ப்பு இருந்தும் அது கடைசியில் கைநழுவிப் போனது.
ஜான்சன் அடித்த 88 ஒட்டங்கள் அவுஸ்திரேலியா 505 ஓட்டங்கள் குவிக்க வழி வகுத்தது. அத்துடன் இந்தியாவின் முக்கியமான வீரர்களை வீழ்த்தி வெற்றிக்கும் வித்திட்டார்.
இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 3-வது நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 71 ஓட்டங்கள் எடுத்திருந்தது. தவான் 26 ஓட்டங்களுடனும், புஜாரா 15 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
வலை பயிற்சியின்போது தவானுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் கோஹ்லி களம் இறக்கப்பட்டார். அவர் 1 ஒட்டத்தில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த ரகானோ (10), ரோகித் சர்மா (0), டோனி (0) ஆகியோர் சொற்ப ஒட்டங்களில் ஆட்டம் இழந்தனர். அதன்பின் வந்த தவான் 81 ஒட்டங்கள் அடித்தார். எனவே, தவான் முன்கூட்டியே இறங்கியிருந்தால் இந்தியா கூடுதல் ஒட்டங்கள் சேர்த்திருக்கலாம் என்று கூறப்பட்டது.
இதுகுறித்து டோனி கூறும்போது, நாங்கள் வலைப் பயிற்சியில் ஈடுபட்டபோது பயிற்சிக்காக அமைக்கப்பட்ட ஆடுகளம் நன்றாக இல்லை. பயிற்சியின் போது தவானை பந்து தாக்கியது.
காயத்திற்காக எந்த அறிகுறியும் தவானிடம் இருந்து வரவில்லை. அதனால் அவர் சிறப்பாக பேட்டிங் செய்வார் என்று நினைத்தோம். போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் அவர் அதிகமாக வலி இருப்பதால், தன்னால் பேட்டிங் செய்ய முடியவில்லை என்றார்.
அதனால், வீராட் கோஹ்லியை தயார்படுத்துவதற்கு அவருக்கு 5 முதல் 7 நிமிடங்கள் மட்டுமே வாய்ப்பு கொடுக்க முடிந்தது.
அதேசமயம் தவானை துடுப்பெடுத்தாட அனுப்புவதா? அல்லது கோஹ்லியை அனுப்புவதா? என்பது தொடர்பாக வீரர்கள் அறையில் தொடர்பு கொள்ள இயலாததால், சூழ்நிலையை கையாள முடியவில்லை. இதனால், வீரர்கள் அறையில் பதட்டமாக காணப்பட்டது. மதிய உணவு இடைவேளைக்கு முன்பான ஆட்டம் எங்களுக்கு பெரும் சங்கடமாகவும் இருந்தது.
ஜான்சன் அருமையாக துடுப்பெடுத்தாடினார். இந்தியா பந்து வீச்சாளர்கள் புதிய பந்தை எடுக்கும்போது பந்து மென்மையாகவும், அதே சமயத்தில் பந்து வீச்சாளர்கள் சோர்வாகவும் இருந்தார்கள். இதனால் ஜான்சன் அடித்து விளையாடினார்.
மேலும், அவருக்கு அதிர்ஷ்டமும் இருந்தது. இதனால் அவர் அடித்த பந்து களத்தடுப்பாளர்களிடம் செல்லவில்லை, அவர் ஒட்டங்கள் குவித்தார்.
3-வது போட்டி மெல்போர்னில் சிறப்பான நாளில் தொடங்குகிறது. அதிக அளவு ரசிகர்கள் மத்தியில் விளையாடுவது சந்தோஷம். எங்களுக்கு மெல்போர்ன் சிறப்பாக அமையும் என நம்புகிறோம் என்று கூறியுள்ளார்.