தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இப்படியும் மனிதர்கள் -….

வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய இலங்கை  பெண் ஒருவர் நீண்ட காலமாக வைத்தியசாலையில் வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

வெளிநாட்டு பணிக்காக சென்றிருந்த போது நோய்வாய்ப்பட்டு இலங்கை வந்த பெண் ஒருவர், கடந்த ஒரு வருடமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த போதிலும் ,உறவினர் எவரும் அவரை பார்வையிட வரவில்லை என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 44 வயதுடைய  குறித்த பெண் தற்பொழுது  தங்கொட்டுவ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

எனினும் உறவினர்கள் ஒருவரும் அவரை அழைத்து செல்லாமையினால் வைத்தியசாலை ஊழியர்கள் அசௌகரியத்திற்கு முகங்கொடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது..

இந்நிலையில்  கடந்த ஜுலை மாதம் 10ஆம் திகதியுடன் அவருக்குகான  சிகிச்சைகள் நிறைவடைந்துள்ளன.

குறித்த பெண் தொடர்பில் உறிவினர்களிடம் அறிவிக்குமாறு பொலிஸாரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் அதற்கு சரியான பதில் கிடைக்காமையினால் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த பெண் வயதில் குறைந்தவர் என்பதனால் அவரை முதியோர் இல்லத்திற்கும் அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...