Designed by Iniyas LTD
உண்மையை கூறாவிட்டால் அச்சமும் பீதியும் ஏற்படுமாம்! மகிந்த
தேசிய பாதுகாப்பு தொடர்பில் தற்போது பிரச்சினைகள் தலைதூக்கியுள்ளதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.சாவகச்சேரியில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிபொருட்கள் தொடர்பில் அரசாங்கம் மக்களுக்கு உண்மைகளை வெளிபடுத்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். அதன் உண்மைகளை மறைப்பதனால் மக்களுக்கு அச்சமும் பீதியும் ஏற்படுவதாக தெரிவித்த மகிந்த ராஜபகச்ச, இந்தப் பிரச்சினை குறித்து புத்திசாலித்தனமாக சிந்திக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் உண்மையான தகவல்களை வெளியிட வேண்டும் எனவும் மாறாக அதனை விடுத்து ஏனையவர்களுக்கு விரல் நீட்டுவதும், அவர்களை கைது செய்வதும் உகந்ததல்ல எனவும் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய பதிவு