Designed by Iniyas LTD
ஐ நா வில் தற்காலிக அறிக்கையை சமர்ப்பித்தது ஸ்ரீலங்கா!
பொறுப்புக்கூறல் மற்றும் தேசிய நல்லிணக்கம் தொடர்பிலான தற்காலிக அறிக்கையை ஸ்ரீலங்கா அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சமர்ப்பித்துள்ளது.
காணாமற்போனவர்களின் தற்போதைய நிலைமை தொடர்பில் கண்டறிவதற்கு விசேட குழு அமைக்கப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 31 ஆவது கூட்டத் தொடரின் போது, மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் இலங்கை விஜயம் தொடர்பில் அவரது நீண்ட உரையில் தெரிவித்திருந்தார்.
இந்த அமர்வுகளில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கலந்து கொண்டு, அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறலை மையப்படுத்திய தேசிய பொறிமுறையின் தற்காலிக அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.அந்த அறிக்கையில் 2015 ஆம் ஆண்டு ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைவான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், ஆரம்பகட்ட நகர்வுகள் குறித்தும் தெளிவூட்டப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.