Designed by Iniyas LTD
ஒட்டிசுட்டானில் அத்துமீறி மண் அகழ்வும் காடழிப்பும்! மக்கள் விசனம்
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் சின்னச்சாளம்பன் பகுதியில் அனுமதிகளுக்கு முரனான கல் அகழ்வுகள் மற்றும் காடழிப்பு என்பன அயல் கிராமங்களை பெரிதும் பாதிக்கின்றன என இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசசெயலர் பிரிவின் கீழ் உள்ள சின்னச்சாளம்பன் பகுதியில் அனுமதிகளுக்கு முரனான வகையில் கருங்கல் அகழ்வுகள் இடம்பெற்;று வருகின்றன.
அத்துடன் காடழிபுக்களும் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக மிக ஆழமான குழிகளாக வெட்டப்பட்டு கல் அகழ்வுகள் இடம்பெறுகின்றன.
இதனால் இதனைச்சூழவுள்ள கிணறுகளில் தண்ணீர் வற்றிக்காணப்படுவதுடன் எதிர்காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் அபாய நிலை காணப்படுகின்றது.
எனவே இதற்கான அனுமதிகளை வழங்கிய அதிகாரிகள் ஒட்டுசுட்டான் பகுதியில் கல் அகழ்வு இடம்பெறும் பகுதியை அண்மித்த கிராமங்களில் தற்போதைய நிலையினை கருத்திற்கொண்டு இவற்றை தடைசெய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.