தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கடலூர் வெள்ளப் பாதிப்பை ஆய்வு செய்கிறது மத்திய குழு!

கடலூரில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை மத்தியக்குழு இன்று ஆய்வு செய்கிறது. இதற்கு முன்னதாக, மத்திய உள்துறை இணைச் செயலாளர் டி.வி.என்.எஸ்.பிரசாத் தலைமையிலான குழு சென்னை தாம்பரம், முடிச்சூர், சைதாப்பேட்டை, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தியது.

kadalur

 அப்போது செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பிரசாத், வெள்ள பாதிப்பு குறித்து முழுமையாக ஆராய்ந்து மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவித்தார்.

அறிக்கையின் பரிந்துரைகள் குறித்து மத்திய அரசு முடிவு செய்யும் என்றும் அவர் கூறினார். முன்னதாக, மத்தியக்குழுவினர் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

அப்போது பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் சேதத்தை துல்லியமாக ஆய்வு செய்யும்படி மத்தியக்குழுவை முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.

Comments
Loading...