தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

15 தமிழக மீனவர்களை சிறைபிடித்தது இலங்கை கடற்படை!

fishermen_3_1இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 15 பேரையும், 3 படகுகளையும், இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றுள்ளது. இவர்களில் 6 மீனவர்களை வவுனியா சிறையில் அடைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 எஞ்சிய 9 மீனவர்கள் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 இவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments
Loading...