தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கிரிக்கெட்டில் சாதிப்பதற்கு நீண்டகாலம் எடுக்கும் – முரளிதரன்

கிரிக்கெட்டில் சாதிப்பதற்கு நீண்டகாலம் எடுக்குமென இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.muralitharan_001

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் கழகங்களுக்கான கிரிக்கெட் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு, கிரிக்கெட் பயிற்சியினை அளித்தார் முரளிதரன்.

இதன் பிறகு அவர் உரையாற்றுகையில், விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்றால் எந்தளவிற்கு விளையாட முடியுமென்பதை உங்களுக்குள் ஊக்குவித்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம் உங்கள் திறமைகளை காட்ட முடியும்.

சிறுவயது முதல் கிரிக்கெட்டினை கற்றுக் கொண்டாலும், அனைத்து விடயங்களையும் அந்த வயதில் கற்றுக் கொள்ள முடியாது. அதற்கு நீண்டகாலம் எடுக்கும்.

தேசிய ரீதியில் விளையாட வேண்டுமாயின் பாடசாலை மட்டத்தில் திறமைகளை காட்ட வேண்டும். அதன் பின்னர் கழகங்கள் ரீதியில் திறமையை காட்ட வேண்டும்.

மாகாண ரீதியில் திறமை காட்ட வேண்டும். இதன் மூலம் இலங்கை அணியில் இணைந்து கொள்ள முடியும். ஆனால் அதற்கு நீண்ட காலம் எடுக்கும்.

சிறு வயதில் காட்டும் திறமைகள் தான் வெற்றிக்கு வழி வகுக்கும் என்று மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

Comments
Loading...