தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

குற்றமிழைத்த சிறிலங்கா படையினருக்கு சிறைச்சாலைக்குள் ஆசி வழங்கிய தேரர்!

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் ஊடகவியலாளர்களைப் படுகொலை செய்த, மற்றும் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறிலங்கா படையினரை சிறைச்சாலையில் சந்தித்து ஆசி வழங்கியுள்ளார் எல்லே குணவன்ச தேரர்.

சிறிலங்கா அரசாங்கத்தினால் போர் வெற்றி நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்ட நேற்றைய தினம், வெலிக்கடைச் சிறைச்சாலைக்குச் சென்று, அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறிலங்கா படையினரை எல்லே குணவன்ச தேரர் சந்தித்தார்.

லசந்த விக்கிரமதுங்க படுகொலை, பிரகீத் எக்னெலிகொட கடத்தல், கீத் நொயார், உபாலி தென்னக்கோன் மீதான தாக்குதல்களில் தொடர்புடைய படையினருக்கு அவர் பிரித் ஓதி வழிபாடுகளை நடத்தி ஆசி வழங்கினார்.

Comments
Loading...