தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர் ஒருவர் கைது

குவைத்தில் சட்ட விரோதமாக தங்கியிருந்த இலங்கையர் ஒருவரை அந்நாட்டு பொலிஸார் கைதுசெய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. 

குறித்த நபர்  குவைத்தில்   தங்கியிருப்பதற்கான அனுமதிப்பத்திரம் நிறைவடைந்த நிலையில்  பொலிஸாரால் அவர்  கைதுசெய்யப்பட்டுள்ளார்.

உள்துறை அமைச்சு

இந்நிலையில் குறித்த நபர் ஒரு வருடத்திற்கு முன்னரே நாட்டை விட்டு வெளியேறியமைக்கான பதிவுகள் உள்ளதாக  குவைத்தின்  உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. 

இதேவேளை   சட்ட விரோதமாக நாட்டிற்குள் தங்கியிருந்தமைக்காக உள்துறை அமைச்சு  குறித்த நபருக்கு அபராதம் விதித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Comments
Loading...