தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பிறப்புச் சான்றிதழ்களில் இன அடையாளங்களை மாற்றி இலங்கையர் என குறிப்பிடவேண்டும் – உள்நாட்டு அலுவலகள் அமைச்சர்..

பிறப்புச் சான்றிதழ்களை வழங்கும் போது சிங்களம், தமிழ், முஸ்லிம் என இன அடையாளங்களை மாற்றி இலங்கையர் என்று குறிப்பிடப்படுவதை ஆரம்பிக்க வேண்டும் என என தெரிவிகப்பட்டுள்ளது.

இதனை உள்நாட்டு அலுவலகள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் சாவகச்சேரியல் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஒருவர் பிறந்த உடனேயே பிறப்புச் சான்றிதழில் சிங்களம், தமிழ், முஸ்லிம் என பிரிக்கப்படுகின்றனதாகவும்  இந்த நடைமுறையை நிறுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இனிவரும் காலங்களில் பிறப்புச் சான்றிதழ்களில் இலங்கையர் என்று எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,

நாம் இனங்களாக பிரியாது அனைவரும் மனிதர்கள் என்ற அடிப்படையில் பணியாற்ற வேண்டும் எனவும், இதன் மூலமே நாட்டை முன்னேற்ற முடியும் அவர் கூறியுள்ளார்.

ஒரே நாட்டு மக்களாக ஒரே இலங்கையர்கள் என்ற வகையில் முன்னோக்கி செல்ல வேண்டும் என்பதே   பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தேவை என்றும்,

இனங்களாக பிரிந்து எம்மால் என்றுமே நாட்டை கட்டியெழுப்ப முடியாது எனவும் அமைச்சர் வஜிர அபேவர்தன இதன்போது மெலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...