Designed by Iniyas LTD
கூடங்குளத்தில் புதிய அணு உலைகள் அமைப்புக்கு வைகோ கண்டனம்
கூடங்குளத்தில் புதிய அணு உலைகள் அமைக்கப்படுவதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் 31 முறை பழுதடையும் அளவிற்கு அணு உலைகள் செயல்பட்டுவருவதாக விமர்சனம் செய்துள்ள்ளார். மேலும் செலவைக் குறைக்கும் எண்ணத்தில் கூடங்குளத்தில் தரமற்ற கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ள கருத்தையும் வைகோ சுட்டிக் காட்டியுள்ளார்.
மக்களின் பாதுகாப்பு, வாழ்வாதாரம் குறித்த கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இரண்டு அணு உலைகளை தொடங்கும் திட்டத்தை கைவிடுவதுடன், சரிவர இயங்காத 1 மற்றும் 2வது அணு உலைகளையும் மூடவேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.