தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கைது செய்யப்பட்ட நாள் முதல் சிறையில் கடுமையான துன்பப்பட்டோம்- தாயகம் திரும்பிய தமிழக மீனவர்கள்

பொது மன்னிப்பு அடிப்படையில் தூக்குத்தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் தம்மை இலங்கை கடற்படை கட்டி வைத்து அடித்ததாகவும், சிறையில் துன்பப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். பொது மன்னிப்பு அடிப்படையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவால் கடந்த 19 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்ட 5 மீனவர்கள் நேற்று இராமநாதபுரம் தங்கச்சிமடம் சென்றடைந்தனர்.fishers

அங்கு இவர்களை தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் சுந்தரராஜ், மீன்வளத்துறை செயலர், ஆணையர் ஆகியோர் பொன்னாடை போற்றி வரவேற்றனர்  இந்த நிகழ்ச்சியில் மீனவர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர், பள்ளி மாணவர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டார் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மீனவர் பிரசாத் :- எங்களை கைது செய்த இலங்கை கடற்படை நெடுந்தீவு கொண்டு சென்று கையை கட்டி வைத்து அடித்தனர். இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதுதான் போதை பொருள் கடத்தியதாக வழக்கு பதிவு செய்ததாக தெரிவித்தனர். தொடர்ந்து இலங்கை தமிழ் மீனவர்கள் 3 பேரை அழைத்து வந்து எங்களை அடையாளம் காட்டியபோது அவர்கள் எங்களை யாரென்று தெரியாது என்று சொல்லியும் நீதிமன்றம் அதனை கேட்க மறுத்துவிட்டது.

இதனால் கைது செய்யப்பட்ட நாள் முதல் சிறையில் கடுமையான துன்பப்பட்டதாகவும் தெரிவித்தனர். இதேவேளை மீண்டும் நாங்கள் சொந்த ஊர் வருவோம் என்று நினைத்தே பார்க்க வில்லை என்றும் தங்களின் விடுதலைக்காக போராடிய மத்திய, மாநில அரசுகள் மட்டும் இன்றி போராடிய அனைவரும் நன்றி தெரிவித்தார்.

Comments
Loading...