தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சிரியாவில் ரஷ்ய விமானங்கள் குண்டு மழை பொழிந்து தாக்குதல்: 30 பேர் கொல்லப்பட்டதாக தகவல்

Russian Airstrikes Target 36 ISIS Positions Over 24 hrs in Syriaசிரியாவின் வடமேற்குப் பகுதியில் ரஷ்ய விமானங்கள் நடத்தியத் தாக்குதலில் 30பேர் கொல்லப்பட்டதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

 துருக்கியின் எல்லைப்பகுதியை ஒட்டியுள்ள நாட்டின் வடமேற்குப் பகுதியில் ரஷ்யாவின் தாக்குதல்கள் சமீப காலத்தில் தீவிரமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள சிரியா கிளர்ச்சிக்குழுவினர், இட்லிப் பிராந்தியத்தில் உள்ள அரிஹாவின் சந்தைப்பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் அப்பாவி மக்கள் பலர் காயமடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

 இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள வீடியோவில், அதிகம் பாதிக்கப்பட்ட சந்தைப்பகுதியில் இருந்து காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

 இட்லிப் பிராந்தியத்தில் ரஷ்யப்படைகளின் தாக்குதலினால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதை பிரிட்டனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பும் உறுதி செய்துள்ளது.

Comments
Loading...