Designed by Iniyas LTD
ஜெக்கு வாழ்த்து தெரிவித்த சிபி சக்கரவர்த்தி
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று அதன் பொதுச் செயலாளர் ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றுள்ளார். இதுகுறித்து மத்திய பிரதேசத்தின் நரசிங்கபூர் மாவட்ட ஆட்சியர் சிபி சக்ரவர்த்தி தனது முகநூல் பக்கத்தில்,”வாழ்த்துகள் அம்மா’ என ஆங்கிலத்தில் வாழ்த்துச் செய்தியை பதிவிட்டிருந்தார். எனினும், இந்தப் பதிவினை சில மணிநேரங்களில் அவர் நீக்கிவிட்டார்.
ஆனால்,ஜெயலலிதாவுக்கு வாழ்த்துத் தெரிவித்தது குறித்து விளக்கம் கேட்டு சிபி சக்ரவர்த்திக்கு மத்தியப் பிரதேச அரசு நோட்டீஸ்அனுப்பியிருக்கிறது. இதனை அந்த மாநிலத்தின் பொது நிர்வாகத் துறைச் செயலாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இதனிடையே, இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி சிபி சக்ரவர்த்தி மறுத்துவிட்டார்.
முன்னதாக, நாட்டின் முதல் பிரதமர் நேருவைப்புகழ்ந்து முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவித்ததாக மத்திய பிரதேச மாநிலத்தின் பர்வானி மாவட்ட ஆட்சியர் அஜய்சிங் கேங்வார் பணியிட மாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது