தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழக வீரர் ஆரோக்ய ராஜீவ் ஆசிய கிராண்ட் பிரி தடகளப் போட்டியில் தங்கம் வென்றார்

gold1ஆசிய கிராண்ட் பிரி தடகளப் போட்டி தாய்லாந்தில் நடைபெற்றது. அதில் 400 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர் ஆரோக்ய ராஜீவ் தங்கப்பதக்கம் வென்றார்.

ஆடவர் 400 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த ஆரோக்ய ராஜீவ் பந்தய தூரத்தை 45.81 நொடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். ஆசிய கிராண்ட் பிரி தடகளப் போட்டியில் இந்திய அணி வெல்லும் மூன்றாவது தங்கப்பதக்கமாக இந்நிகழ்வு அமைந்தது.

 ஏற்கனவே குண்டு எறிதலில் இந்தர்ஜீத் சிங்கும், 800 மீட்டர் ஓட்டத்தில் ஜின்சன் ஜான்சனும் தங்கப்பதக்கம் வென்றிருந்தனர். இந்திய அணி மூன்று தங்கப்பதக்கங்கள், இரண்டு வெள்ளிப்பதக்கங்கள், 5 வெண்கலப்பதக்கங்கள் என மொத்தம் 10 பதக்கங்களுடன் நிறைவு செய்தது.

Comments
Loading...