Designed by Iniyas LTD
விம்பிள்டன் டென்னிஸ்: ஆறாவது முறையாக செரீனா சாம்பியன் பட்டம் வென்றார்
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில், அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று மகுடத்திற்கான இறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில், ‘நம்பர் ஒன்’ வீராங்கனையான அமெரிக்க சூறாவளி செரீனா வில்லியம்சும், 20-ம் நிலை வீராங்கனை ஸ்பெயினின் கார்பின் முகுருஜாவும் பலப்பரீட்சை நடத்தினர்.
இப்போட்டியில் செரீனாவுக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். அதேசமயம், முன்னணி வீராங்கனைகளுக்கு சவால் அளித்து, இறுதிப்போட்டி வரை முன்னேறிய முகுருசாவும் செரீனாவை ஒருமுறை தோற்கடித்திருப்பதால், இந்தப் போட்டி செரீனாவுக்கு சற்று சவாலாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அனுபவ வீராங்கனையான செரீனா, தனது அபார சர்வீஸ்களால் முகுருசாவை நிலைகுலையச் செய்து, 6-4, 6-4 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்று மகுடம் சூட்டினார். இதன்மூலம் 21-வது கிராண்ட்ஸ்லாம் பட்டதை செரீனா வென்றுள்ளார். இது விம்பிள்டனில் பெறும் 6-வது பட்டம் ஆகும்.