Designed by Iniyas LTD
தமிழீழத்தை இனி கைவிடுவோம்! சிறிதரன் எம்.பி
தமிழீழம் குறித்து இனியும் பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என்று தெரிவித்துள்ள யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தமிழீழம் என்ற பேச்சை எடுத்தால் புத்திஜீவிகள் பயப்படுகின்றார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாட்டில் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிவது தொடர்பாக கிளிநொச்சியில் சிறிதரன் எம்.பியின் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு உரையாற்றிய அவர் தமிழிழத்தை மக்கள் நிராகரித்துள்ளதாகவும் சிங்கள மக்கள் மத்தியில் போய் நின்று கொண்டு தமிழீழத்தை கோரி பேச இயலாது என்றும் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய பதிவு
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது விஞ்ஞாபனத்தில் தமிழீழக் கோரிக்கையை முன் வைத்து தேர்தலில் போட்டியிடவில்லை என்று குறிப்பிட்ட அவர் தமிழீழ கோரிக்கைக்கு அப்பால் சென்று தீர்வை முன்வைத்து போட்டியிட்டவர்களையும் மக்கள் நிராகரித்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.
தரப்போகும் தீர்வை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்ட அவர் தற்போது வெளிநாடுகளில் உள்ள அரசியலமைப்புக்களைப் போன்றதொரு அரசியலமைப்பை இலங்கையில் கொண்டுவர ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் இதனை ஆதரிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழீழம் குறித் இனியும் பேசிக்கொண்டிருக்காமல் அவ்வாறு பேசி புதிய அரசியலமைப்பு முயற்சிகளை குழப்பாமல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
