Designed by Iniyas LTD
தமிழ் ஈழம் ஒன்றே இறுதித்தீர்வு!
தமிழீழமே தமிழர்களால் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் தீர்வு என்பதில் எமது மக்கள் என்றைக்கும் மிக உறுதியாகவே இருந்துவருகின்றார்கள். இந்த உறுதிப்பாட்டை, எந்த சக்தியாலும் எந்தக் காலத்திலும் உடைத்துவிட முடியாது. பல ஆயிரமாயிரம் மாவீரர்களதும் மக்களதும் தியாகத்தாலும் உயிர்க்கொடையாலும் உரமேறி, உறுதிபெற்று, வைரம்பெற்ற எமது தமிழீழ மண் – உலகத் தமிழினத்தை விழிப்படைய வைத்த மண் – விடிவுபெறும்வரை அதற்கான போராட்டம் ஒருபோதும் ஓயாது. எமது இனம் மிகவும் சக்திவாய்ந்த இனம். உலகின் அத்தனை நாடுகளிலும் பரந்து வாழ்கின்ற இனம். மிகவும் தொன்மையான இனம். தனித்துவமான இனம். மிக அறிவார்ந்த இனம்.
உலகெங்கும் பரந்து வாழும் எமது இனத்தின் அடங்காத தாய்மண் பற்றும், உணர்வுக் கொந்தளிப்பும் தமிழீழ விடுதலையைப் பறைசாற்றிக் கொண்டே இருக்கிறது. தமிழர்களுடைய தார்மீக உரிமையை, இறைமையை, தமிழீழத் தனி ஆட்சியை சிங்களதேசம் இனியொருபோதும் தர மறுத்தால், நிச்சியம்1.5 கோடியே உள்ள சிங்கள இனம் வரலாற்றில் காணாமல் போகின்ற சூழல் வருவதை எதிர்காலம் உருவாக்கலாம்.
அதற்கு உலகின் வளர்ந்துவரும் அதி நவீன படைக்கலத் தொழினுட்பமே எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்ற சக்தியாக (சான்றாக) உள்ளது. தமிழினியால் அல்லது தமிழினியின் பெயரால் ஒரு அல்ல; எத்தனை கூர்வாள்கள் எழுதப்பட்டாலும் உலகெங்கும் வாழும் எமது மக்கள் மிக உறுதியாகவும் தெளிவாகவுமே இருக்கின்றார்கள். சர்வதேசத்தின் துணைகொண்டு முள்ளிவாய்க்காலில் இரண்டு இலட்சம் தமிழ்மக்களை கொன்றொழித்ததோடு தமிழரின் போராட்டம் அடங்கிவிட்டது என்று அல்லது தமிழர்கள் அடிபணிந்துவிட்டார்கள் என்று சிங்கள தேசம் கனவு காண்பது, தன் இனத்துக்குச் செய்யும் பெருந்தவறாகவே அமையும்.
சிங்களதேசம் போர் வெற்றிக் கனவுலகில் மிதப்பதும் தமிழர்களைத் தொடர்ந்து சீண்டுவதும் நெடுநாள் நிலைக்காது. அது, தனக்குத் தானே புதைகுழி வெட்டுவதாகவே முடியும். இப்பொழுது தமிழரின் விடுதலைக்குத் தடையாக அல்லது பலவீனமாக இருப்பது இரண்டு முதன்மைக் காரணிகள் மட்டுமே. ஒன்று, பூகோள அரசியற் புறச்சூழல். இரண்டு, உலகளாவிய தமிழர்களையும் உலகளாவிய தமிழர்களின் ஒட்டுமொத்தப் பலத்தையும் ஒன்றுபடுத்தி, ஒருங்கிணைத்து சரியாக வழிப்படுத்தக்கூடிய, வழிகாட்டக்கூடிய தலைமை. இந்த இரண்டு குறைபாடும் நிரந்தரம் இல்லை.
இது ஒரு இடைக்காலம்தான். எல்லாவற்றுக்கும் காலம் கனிந்து வரும். மாவீரரின் தியாகம் ஒருபோதும் வீண்போகாது. அந்த காலம் கனியும்வரை தமிழர்களும் தமிழ்த் தலைமைகளும் ஆற்றவேண்டிய முதன்மைக் கடமைகள் இரண்டு மட்டுமே. ஒன்று, தமிழீழம் என்ற இலட்சியத்தில் என்றைக்கும் உறுதியாக இருத்தல். இரண்டு, தமிழீழத்துக்காக தொடர்ந்து உழைத்தல். “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.”
நன்றி.
#கலைவண்ணன்.
