Designed by Iniyas LTD
தலித் குழந்தைகள் எரித்துக் கொலை: ஹரியானாவில் பொதுமக்கள் சாலை மறியல்
ஹரியானாவில் தலித் குழந்தைகள் எரித்துக் கொல்லப்பட்டதைக் கண்டித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பல்லப்கார்க் கிராமத்தை ஒட்டிய தேசிய நெடுஞ்சாலையில், உயிரிழந்த குழந்தைகளின் உடல்களோடு, உறவினர்களும், நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர். குழந்தைகளை எரித்துக் கொன்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவர்கள் போராட்டம் நடத்தினர். இதனால், அந்த சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மாவட்ட அதிகாரிகள் நடத்தியப் பேச்சுவார்த்தைக்குப் பிறகும், பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிடவில்லை.
இதனால், காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்ததால், மக்கள் ஆங்காங்கே சிதறி ஓடினர். இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. 400க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, குழந்தைகள் எரித்துக் கொல்லப்பட்டது தொடர்பாக மேலும் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.