Designed by Iniyas LTD
திமுக ஆட்சிவந்தால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கப்படும் என்று மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.
தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் வருகிற மே மாதம் 16-ந் தேதி நடைபெற உள்ள நிலையில் பல்வேறு கட்சிகளும் ‘பூரண மதுவிலக்கு’ என்ற கொள்கையை கையில் எடுத்துள்ளன. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கிற்கு தான் என கிட்டதட்ட எல்லா கட்சிகளும் கூறிவரும் சூழல் உருவாகியுள்ளது.