தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தேசிய தலைவரினால் தமிழீழ காவல் துறை உருவாக்கப்பட்ட நாள் இன்று…

1991, நவம்பர் 18 இல் யாழ்ப்பாணத்தில் தமிழீழக் காவற்றுறையின் முதலாவது அணி பயிற்சி முடித்து தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் முன்னிலையில் அணிவகுத்து காட்டி தம் கடமையை கையில் எடுத்த உன்னதமான நாள் ஆகும்.

தமிழீழ காவல் துறை 1991 நவம்பர் 19 ஆம் திகதி தமிழீழ காவல் துறை ஆரம்பிக்கப்பட்டது. தமிழீழ காவல் துறை ,  தமிழீழ விடுதலைப் புலிகளால் தமிழீழ  பிரதேசங்களில்  தமிழ் மக்கள் வாழ்வை மேம்படுத்த உருவாக்கப்பட்டது.

மிகக்குறைந்த வளங்களோடும் மட்டுப்படுத்தப்பட்ட ஆட்பலத்தோடும் யாழ்ப்பாணத்தில் இயங்கத் தொடங்கிய காவற்றுறையின் சேவை படிப்படியாக மற்ற இடங்களுக்கும் விரிவாக்கப்பட்டது. தமிழீழ எல்லைகளைப் பாதுகாக்கும் பணியிலும் அவ்வப்போது அவர்கள் செயற்பட்டனர்.

குற்றபிரிவு / விசேட குற்றபிரிவு /போக்குவரத்து பிரிவு /புலனாய்வுபிரிவு /தமிழீழ தேசிய தலைவரின் நேரடி விசாரைண பிரிவு /ஆளணி மற்றும் நிர்வாக பிரிவு /விசேட தாக்குதல் பிரிவு /மக்கள் பொதுநல சேவை பிரிவு போன்றவற்றை தழிமீழ காவற்துறை உள்ளடக்கப்பட்டிருந்தது.

தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் நேரடி வழிகாட்டலில் இயங்கிய  காவற்துறைக்கு  பொறுப்பாளர்களாக பா.நடேசனும்.பின்னர் இளங்கோ என்ற ரமேசும் இயங்கினர். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முக்கிய மைற்கல்லாக அமைந்தது ‘தமிழீழக் காவற்றுறை’ உருவாக்கம் என்று கூறினால் மிகையாகாது.

அதோடு 1993 ஆம் ஆண்டு நடைபெற்ற ‘யாழ்தேவி’ முறியடிப்புச் சமர் உட்பட பல சமர்களில் அவர்கள் துணைப்படையணியாகவும் செயற்பட்டுள்ளார்கள். சிலர் களத்தில் வீரச்சாவயும் தழுவிக்கொண்டார்கள்.

ஊழல், இலஞ்சம் துளியளவுமற்ற கறைபடியாத துறை தமிழீழக் காவற்றுறை என்பதோடு எந்த ஒரு குறையும் எங்கள் மண்ணில் படியாமல் காவல் நின்று மாதிரி நேர்த்தியான அரசை நிறுவ துணை நின்றார்கள் .

போர்ச்சூழலிலும்  சமூகக் கட்டமைப்புக் குலையாது பாதுகாத்த பெருமை தமிழீழக் காவற்றுறையைச் சாரும். பதினைந்தாண்டுகள் அரும்பங்காற்றிய தமிழீழக் காவற்றுறை 2009 முள்ளிவாய்க்காலோடு அமைதியாகி போனது.

இன்று மலிந்து கிடைக்கும், கொலை,கொள்ளை, பாலியல் துன்புறுத்தல்கள், காணாமல் போராளிகள், கஞ்சா, போதை, மது கலாச்சார சீரழிவு வாள்வெட்டு, என எம் மக்கள் எம் மண்ணில் படும் துன்பங்கள் சொல்லில் அடங்காது.

“இருப்பவர்கள் இருந்திருந்தால் இப்படி நிகழுமா?” என பதாகைகள் தூக்கி பொற்காலங்களை வலியோடு மீட்டு பார்க்கிறார்கள் எம்மக்கள் .

 

 

 

அதனால் மக்கள் இன்று அமைதி இன்றி பரிதவிக்கின்றார்கள்.

Comments
Loading...