Designed by Iniyas LTD
த்ரிக்ஷாவுடன் மோதவுள்ள சூப்பர் ஸ்டார் நாயகி….
தமிழில் ரஜினி, விஜய், விக்ரம் என பெரிய ஹீரோக்களுடன் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ஸ்ரேயா. இவர் திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிக்காமல் இருந்தார்.
தற்போது ‘நரகாசூரன்’ படத்தில் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இப்படத்தில் சந்தீப் கிஷன், ஆத்மிகா ஆகியோரும் நடித்துள்ளனர்.
தொடர்புடைய பதிவு
துருவங்கள் 16 பட புகழ் கார்த்திக் நரேன் இயக்கியுள்ள இப்படம் ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவித்தார்கள்.
ஆனால், அன்றைய தினத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘இமைக்கா நொடிகள்’, தினேஷின் ‘அண்ணனுக்கு ஜே’ உள்ளிட்ட படங்கள் வெளியாவதால், செப்டம்பர் 13ம் தேதி வெளியிட இருக்கிறார்கள்.
இதேவேளை செப்டம்பர் 13-ல் திரிஷா, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘96’, சிவகார்த்திகேயனின் ‘சீமராஜா’, சமந்தாவின் ‘யூடர்ன்’ ஆகிய படங்கள் வெளியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

